சாலையில் கவனம்

இன்று மக்கள் சாலையில் செல்லும்போது சாலையை மறந்து வீட்டிற்குள் நடமாடுவது போல்,சாலையில் செல்கிறார்கள் முன்னே பின்னே வரும் வாகனங்களை கவனிப்பதில்லை செல்போன் பேசியபடியே செல்கிறார்கள்.குறிப்பாக, இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிவேகமாக செல்கிறார்கள் அல்லது,செல்போன் பேசிக் கொண்டே செல்கிறார்கள் இடது அல்லது வலது பக்கம் திரும்பும் போது சைகை காட்டுவதில்லை அவர்கள் இஷ்டம் போல் திரும்புகிறார்கள் சாலையில் இருக்கும் விழிப்புணர்வு பலகைகளை கவனிப்பதில்லை ஏன் இந்த விழிப்புணர்வற்ற நிலை தெரியவில்லை ஆனால் எதிர்பாராத நிலையில் நடக்கும் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் ஆனால் அவர்களுக்கு மட்டும் இல்லாது மற்றவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது கண்முன்னே பல விபத்துக்கள் நடப்பதைக் கண்டும் மறுபடியும் பழைய நிலையே தொடர்கிறது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை விழிப்புணர்வு பற்றிய பாடங்களை அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் சிறுவயதிலிருந்தே சாலையில் பயணிக்கும்பது கவனமாகவும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சாலை ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு பெற்றோர்களும் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.வளரும் பருவத்தில் நாம் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டால்தான், அந்தப் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வாழ்வில் வரும்.

Advertisements